நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஊசிமலை காட்சி முனையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, இளைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழமுள்ள மலைப் பள்ளத்தில் தவறி விழுந்து பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார்.
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்பட பாணியில் நடந்த இந்த விபத்தில், பலத்த காயமடைந்த அந்த இளைஞரால் தானாக மேலே வர முடியாமல் தவித்து வருகிறார்.
“>
அவரை மீட்க வனத்துறையினரும் போலீஸாரும் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், நிலப்பரப்பின் சவாலான தன்மையைக் கருத்தில் கொண்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கையாக உணர்த்தியுள்ளது.