ஐபிஎல் வரலாற்றில் 19 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சாதனை; முதலிடத்தில் சி.எஸ்.கே வீரரின் சாதனை..!
Seithipunal Tamil March 20, 2026 04:48 AM

19 வது ஐபிஎல் 2026 சீசன் வரும் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது, 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் போட்டி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் தொடங்கவுள்ளது.

கனத்த ஆண்டு சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியது. இந்நிலையில் இந்த ஐ.பி.எல் போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களிடையே புள்ளிவி வரங்கள் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. அதிலும், ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிக நீளமான சிக்ஸர்கள் குறித்த பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது.

2008-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடங்கப்பட்ட ஆண்டில் நடைபெற்ற முதல் ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தென்னாப்பிரிக்க வீரர் ஆல்பி மோர்கெல், 125 மீட்டர் தூரத்திற்கு ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை அடித்தார். இதுவே இன்றுவரை ஐபிஎல் வரலாற்றின் மிக நீளமான சிக்ஸராக முதலிடத்தில் உள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் பல அதிரடி வீரர்கள் வந்த போதிலும், இந்த மைல்கல்லை யாராலும் எட்ட முடியவில்லை.

அடுத்ததாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார், 2013-ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியபோது, 124 மீட்டர் தூரத்திற்கு அடித்த சிக்ஸர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

2011-ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கில்கிறிஸ்ட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 122 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிக்ஸரை விளாசினார். அது மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

அடுத்து, 2010-ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடிய, ராபின் உத்தப்பா தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 120 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்து இந்தப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார்.

'அடுத்த இடத்தில், கிறிஸ் கெய்ல், (யுனிவர்ஸ் பாஸ்) கடந்த 2013-ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 175 ரன்கள் குவித்த அதே போட்டியில் 119 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார் இன்னும் இந்த சாதனைகள் முறியடிக்கப்படவில்லை. இந்தாண்டும் இந்த சாதனைகள் முறியடிப்படுமா என்று பொறுத்திருந்து  பார்ப்போம்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.