“கிங் மேக்கர்னா சும்மாவா!”… சுற்றி வளைத்த கூட்டத்தை ஒற்றை அடியில் சிதறடித்த சிங்கம்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!!
SeithiSolai Tamil March 20, 2026 04:48 AM

காட்டின் ராஜாவான சிங்கத்திடம் வீணாகப் பங்காற்றினால் என்ன நடக்கும் என்பதற்குச் சாட்சியாக ஒரு அதிரடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காட்டில் சிங்கம் ஒன்று தனது இரையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட ஹைனா (Hyenas) கூட்டமாகச் சேர்ந்து சிங்கத்தை வம்பு இழுத்துத் தொந்தரவு செய்தன.

பொதுவாகப் பலமான கூட்டமாக இருந்தால் சிங்கத்தையே மிரட்டும் இந்த விலங்குகள், அன்று சிங்கத்தின் கோபத்திற்கு ஆளாகின. பொறுமை இழந்த சிங்கம், மின்னல் வேகத்தில் பாய்ந்து ஒரு ஹைனா மட்டும் டார்கெட் செய்து ஒற்றைத் தாக்குதலை நடத்தியது.

சிங்கத்தின் அந்த ஆக்ரோஷமான ஒரு தாக்குதலைக் கண்டவுடனேயே, சிங்கம் என்றால் சிங்கம் தான் எனப் புரிந்துகொண்ட மொத்த கூட்டமும் அலறியடித்துக்கொண்டு சிதறி ஓடியது. “ராஜாவிடம் விளையாடாதே” என்ற கேப்ஷனுடன் எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, சிங்கத்தின் அசாத்திய வலிமையை உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.