எவன்கூடயோ ஓடிப் போயிட்டானு அசிங்கப்படுத்தினாங்க- வேதனையை பகிர்ந்த நடிகை கேப்ரியெல்லா
CineReporters Tamil March 20, 2026 02:48 AM

பிரபல சின்னத்திரை நடிகையான கேப்ரியெல்லா, தான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு சந்தித்த கடுமையான விமர்சனங்களை பகிர்ந்துள்ளார்.

அது குறித்து அவர் கூறுகையில், சிறுவயது முதலே நடனத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட கேப்ரியெல்லா, அதையே தனது எதிர்காலமாக மாற்றிக் கொள்ளப் பெரிதும் விரும்பினேன். ஆனால், அவரது தந்தை அவர் நடனமாடக் கூடாது என உறுதியாக மறுப்புத் தெரிவித்துள்ளார். அப்பா அதற்கு மறுத்ததால் வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றேன். ஒரு கட்டத்தில் என்னை கண்டுடித்த தந்தை என்னை சமாதானப்படுத்தி சொந்த ஊருக்கே பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளார்.

ஊருக்கு திரும்பிய கேப்ரியெல்லாவுக்கு அங்கு மிகப்பெரிய மன உளைச்சல் காத்திருந்தது. ஊர் மக்கள் இவள் எவன்கூடயோ ஓடிப் போயிட்டா… கண்டிப்பா கல்யாணமே பண்ணிட்டு இருப்பா” என்று பலரும் அவதூறுகளைப் பரப்பி அசிங்கப்படுத்தினர். தான் செய்த தவறால் எப்படி பட்ட பட்டத்தை வாங்கியுள்ளேன் என்று வருத்தப்பட்டு கூறினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.