மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகனவர் ஷாலின் ஜோயா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பிரபலமடைந்தவர் இவர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் தனது திருமணம் குறித்து பேசிய கருத்து பலரையும் சோகமாக்கியது.
அவர் கூறியபோது, எனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது. என்னை எல்லாம் யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க? நான் காதலுக்கு ஏற்ற ஆளோ, இல்ல கல்யாணத்திற்கு ஏற்ற ஆளோ கிடையாது, என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒருவேளை என்னை யாராவது கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க” என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். எதற்காக இப்படி கூறுகிறீர்கள் அல்லது காதல் தோல்வியா என கேள்வி கேட்டு வருகிறார்கள்.