மார்ச் 21ம் தேதி ரம்ஜான்- தலைமை ஹாஜி அறிவிப்பு
Top Tamil News March 20, 2026 12:48 AM

தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை ரம்ஜான் எனும் பெருநாள் நோன்பு கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி உஸ்மான் பாகவி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் பண்டிகளைகளில் மிக முக்கியானது ரம்ஜான்.  ரமலான்  மாத தொடக்கத்தில்  வானில்  பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். நோன்பு முடிந்து மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் இருக்க வேண்டும்.  பிறை கணக்குப்படி 29 அல்லது 30 நாட்கள் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பர்.  

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் மார்ச் 21, சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி முப்தி உஸ்மான் முஹ்யிதீன் அறிவித்துள்ளார். புதுச்சேரியிலும் வரும் 21இல் ரம்ஜான் கொண்டாடப்படும் என புதுச்சேரி தலைமை ஹாஜி இசூதீன் பாகவி அறிவித்துள்ளார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.