சீனாவுக்குச் செல்லவிருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள், திடீரென திசைமாற்றப்பட்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய நோக்கி வரும் கப்பல்கள்
இந்த இக்கட்டான சூழலை சமாளிக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யத் தொடங்கி இருக்கிறது.
சமீபத்தில் மட்டும் நம் நாடு, 3 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில் சீனாவுக்கு செல்ல இருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள் திடீரென திசைமாற்றப்பட்டிருக்கிறது. தற்போதைய சந்தை தேவைக்கு ஏற்ப அவை நம் நாட்டு துறைமுகங்களை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.
சமீபத்தில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் அனுமதியை தொடர்ந்து, மீண்டும் ரஷ்ய எண்ணெயை அதிகமாக கொள்முதல் செய்யத் தொடங்கி இருக்கிறது.
இந்தியா தவிர ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய்யை அதிகமாக வாங்கத் தொடங்கியிருப்பதால் அதன் விலை விரைவில் உயரக் கூடும் எனும் கூறப்படுகிறது.