கடலுக்கடியில் செல்லும் இண்டர்நெட் கேபிளை கட் செய்கிறதா ஈரான்? அப்படி மட்டும் செய்தால் உலகமே ஸ்தம்பித்து போய்விடும்..!
WEBDUNIA TAMIL March 19, 2026 08:48 PM

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய இணைய போக்குவரத்து பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

ஹார்முஸ் மற்றும் பாப் எல்-மண்டேப் ஜலசந்திகள் வழியாக செல்லும் சுமார் 20-க்கும் மேற்பட்ட கடலடி ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் சிதைக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த மெல்லிய கேபிள்கள் தான் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் டிஜிட்டல் நரம்பு மண்டலங்களாக செயல்படுகின்றன.

தற்போது இப்பகுதிகளில் ஈரான் கடல் கண்ணிவெடிகளை பதித்துள்ளதாலும், ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதாலும், பழுதடையும் கேபிள்களை சரிசெய்யும் கப்பல்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்களின் தரவு மையங்கள் மற்றும் இந்தியாவின் சர்வதேச இணைய இணைப்புகள் இந்த வழித்தடங்களையே நம்பியுள்ளன. ஒருவேளை இந்த கேபிள்கள் துண்டிக்கப்பட்டால், வங்கி சேவைகள், பங்குச்சந்தை மற்றும் ஏஐ தொழில்நுட்பங்கள் முடங்கும் அபாயம் உள்ளது.

எண்ணெய் விநியோகம் முடங்கியதை தொடர்ந்து, இப்போது 'டிஜிட்டல் முடக்கம்' உலகப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.