சுமார் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் கடலில் உருவான நுண்ணுயிரிகள், காலப்போக்கில் புதைபடிவங்களாக மாறி உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஆதாரமாக உருவெடுத்தன.
புவித்தட்டுகள் நகர்ந்த விபத்து நடந்தபோது, அரேபிய தீபகற்பம் யூரேசியாவுடன் மோதியதில் சாக்ரோஸ் மலைத்தொடர் உருவானது. இந்த மோதலால் ஏற்பட்ட அழுத்தமே பாரசீக வளைகுடாவையும், அதன் அடியில் எண்ணெய் குவியலையும் உருவாக்கியது. இந்த புவியியல் மாற்றத்தின் விளைவாகவே வெறும் 30 மைல் அகலமுள்ள 'ஹார்முஸ் ஜலசந்தி' உருவானது.
வரலாற்று ரீதியாக சுமேரிய நாகரிகம் முதல் இன்றைய நவீன காலம் வரை, இந்த ஜலசந்தி உலகின் மிக முக்கியமான வணிக பாதையாக திகழ்கிறது. 1979 புரட்சிக்கு பிறகு ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப்பகுதி, தற்போது 2026 போரினால் முடக்கப்பட்டுள்ளது.
உலகின் 20% எண்ணெய் விநியோகம் இதன் வழியாகவே நடைபெறுவதால், இதன் முடக்கம் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. புவியியல் ரீதியாக அமைந்த இந்த ஒரு சிறிய இடைவெளிதான் இன்று உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.
Edited by Siva