தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்; 37 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் களமிறங்கும் பாஜக; ஏனைய கட்கிகளுக்கான தொகுதி பங்கீடு ..?
Seithipunal Tamil March 20, 2026 07:48 AM

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் 37 தொகுதிகளில் போட்டியிட திட்டம் என சொல்லப்படுகிறது. ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒரே கட்டமாக நடக்கும் இந்த தேர்தலுக்காக முடுவுகள் மே 04 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிப்பட உள்ளன.

இந்த தேர்தலுக்கான அதிமுக – பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவித்துள்ள நிலையிலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை.

இந்தச் சூழலில் நேற்று தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தமிழ்நாடு வருவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நாளை மறுநாள் வரவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கடலிடம் கூறினார். இந்த சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென இன்று டெல்லி சென்றுள்ளார்.

இந்நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் அதிமுக 166 தொகுதிகளிலும், பாஜக நேரடியாக 29 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன், கூட்டணியில் உள்ள ஐ.ஜே.கே, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும், தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி என ஒதுக்கப்பட்டு அவர்களையும் தாமரைச் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி, பாஜகவின் தாமரைச் சின்னத்தில் மொத்தம் 37 தொகுதிகள் போட்டியிட உள்ளதாகவும், பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 09 தொகுதிகள், தமாகவுக்கு 04 தொகுதிகள் ஒதுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்த பிறகே எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதி என்பது தெரியவரும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.