“தண்ணீர் இல்லாம இவ்வளவு கஷ்டமா?” ஊருக்கே தாகம் தீர்த்த ஒரு நபர்…. அந்த டிரான்ஸ்பர்மேஷனை நீங்களே பாருங்க….!!
SeithiSolai Tamil March 20, 2026 09:48 AM

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியான அந்தக் காட்சியில், ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் மிகவும் அசுத்தமான மற்றும் கலங்கலான நீரைத் தங்கள் பாத்திரங்களில் பிடித்துச் செல்வதைக் கண்ட நபர் ஒருவர் அதிர்ச்சியடைந்து அவர்களைத் தடுத்து நிறுத்தினார். “இந்தத் தண்ணீரையா குடிக்கப் போகிறீர்கள்?” என்று அவர் கேட்க, அந்த மக்களும் வேறு வழியின்றி “ஆமாம்” என்று பதிலளித்தனர். அவர்களின் வறுமையையும், அடிப்படைத் தேவைகூட நிறைவேறாத நிலையையும் கண்ட அந்த நபர், உடனடியாக அதன் காரணத்தை ஆராயத் தொடங்கினார்.

அங்குள்ள பொதுத் தண்ணீர் பம்ப் பழுதடைந்து பல நாட்களாக வேலை செய்யாமல் இருப்பதே இந்த அவல நிலைக்குக் காரணம் என்பதை அவர் கண்டறிந்தார். தாமதிக்காமல் உடனடியாக ஒரு பிளம்பரை வரவழைத்த அவர், தனது சொந்த முயற்சியால் அந்தப் பைப் மற்றும் பம்ப் செட்டை முழுமையாகச் சரிசெய்து கொடுத்தார். பழுது நீக்கப்பட்டதும் பம்பிலிருந்து பீறிட்டு வந்த சுத்தமான தண்ணீரைக் கண்ட அந்த மக்களின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி பார்ப்போரைக் கண்கலங்க வைத்தது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி அந்த நபர் செய்த இந்தச் சிறு உதவி, ஒரு கிராமத்தின் தாகத்தைத் தீர்த்ததோடு, இணையதளவாசிகளின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.