“நம்ம Punch-க்கு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைச்சாச்சு” இந்த ஜோடி தான் இப்போ இன்டர்நெட் சென்சேஷன்….!!
SeithiSolai Tamil March 20, 2026 10:48 AM

ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் ‘பஞ்ச்’ என்ற ஜப்பானிய மக்காக் குரங்கு, மீண்டும் இணையதளங்களை ஆக்கிரமித்துள்ளது. பிறந்தவுடன் தனது தாயால் கைவிடப்பட்ட இந்தக்குட்டி குரங்கு, ஒரு மென்மையான ‘ஒராங்குட்டான்’ பொம்மையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஆறுதல் தேடிய வீடியோ ஏற்கனவே பலரையும் கண்ணீர் சிந்த வைத்திருந்தது. ஆனால், இப்போது பஞ்ச் வாழ்க்கையில் ஒரு அழகான திருப்பம் ஏற்பட்டுள்ளது. ‘மோமோ-சான்’ என்ற பெண் குரங்குடன் பஞ்ச் காதல் வயப்பட்டுள்ள வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, விளையாடும் காட்சிகள் பார்ப்போரை “அடடே” என வியக்க வைத்துள்ளது.

View this post on Instagram

A post shared by Beyond the Wildlife (@beyond_the_wildlife)