செல்பி எடுக்கும்போது 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த இளைஞர்.. 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!
TV9 Tamil News March 20, 2026 12:48 PM

கூடலூர், மார்ச் 20 : கடலூர் – ஊட்டி (Cuddalore – Ooty) தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலையில், காட்சிமுனை பகுதி ஒன்று உள்ளது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 19, 2026) மாலை தடையை மீறி அந்த பகுதிக்கு சென்ற இளைஞர் ஒருவர் கீழே இருந்த சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனால், பலத்த காயமடைந்த அவர், அங்கேயே சிக்கிக்கொண்ட நிலையில், தற்போது 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

செல்போன் மூலம் விடுதிக்கு தகவல் அளித்த இளைஞர்

தான் பள்ளத்தில் விழுந்ததை சக சுற்றுலா பயணிகள் யாரும் கவனிக்காத நிலையில், அந்த இளைஞர் தனது செல்போன் மூலம் விடுதிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் மூலம் தகவல் போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இந்த நிலையில், நடுவட்டம் போலீசார், வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளத்தில் விழுந்த இளைஞரை ட்ரோன் மூலம் தேடியுள்ளனர். அப்போது அந்த இளைஞர் உயிருடன் இருப்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதையும் படிங்க : எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அன்புமணி டெல்லி பயணம் – என்ன நடக்கிறது?

இளைஞரை மீட்க முடியாமல் காவல் காத்த வனத்துறையினர்

மீட்பு பணிகளின் போது இரவு நேரமாகிவிட்டதால், இளைஞரின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் பள்ளத்தில் இறங்கியுள்ளனர். அவரை கயிறு மூலம் மீட்க முடியாமல் போன நிலையில், யானை வரும் பாதை என்பதால் நெருப்பு மூட்டி இளைஞருக்கு காவலாக இருந்துள்ளனர். இந்த நிலையில், நீலகிரி எம்பி ஆ.ராசா, குன்னூர் வெலிங்டன் ராணுவ மைய அதிகாரிகளை தொடர்ப்புக்கொண்டு பேசியுள்ளார். அதன்படி, ராணுவ அதிகாரிகள் இளைஞரை மீட்பதற்காக குன்னூர் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : தூத்துக்குடி மாணவி வன்கொடுமை வழக்கு – குற்றவாளியை கைது செய்தது எப்படி? எஸ்பி விளக்கம்

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற ராணுவத்தினர் உபகரணங்களை பயன்படுத்தி இளைஞரை மீட்டுள்ளனர். 150 அடி பள்ளத்தில் விழுந்ததால் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியை சேர்ந்த் 28 வயது சிவகுருநாதன் என்பது தெரிய வந்துள்ளது.

செல்பி எடுக்க சென்று கீழே விழுந்த இளைஞர்

அவர் செல்பி எடுக்கும்போது தவறு அந்த 150 பள்ளத்தி விழுந்துள்ளார். படுகாயங்களுடன் பள்ளத்தில் சிக்கி தவித்த அவர், சுமார் 12 மணி நேர மீட்பு பணிகளுக்கு பிறகு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.