மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் சூழல், 1991-ஆம் ஆண்டு வளைகுடா போரின் போது ஏற்பட்ட மோசமான சுற்றுச்சூழல் பேரழிவை மீண்டும் நினைவூட்டுகிறது.
அன்று குவைத்திலிருந்து பின்வாங்கிய ஈராக் படைகள், சுமார் 750-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளுக்குத் தீ வைத்தன. இதனால் வெளியேறிய கரும்புகை பல மாதங்களாக வானத்தை மறைத்து, பகலையே இரவாக்கியது. இந்த நச்சுப்புகை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து, இமயமலை பகுதிகளான காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் 'கருப்பு பனிப்பொழிவு' ஏற்பட காரணமாக அமைந்தது.
தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் மீண்டும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன.
ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல், சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் நிலையங்கள் மற்றும் கத்தாரின் ராஸ் லஃப்பான் எல்என்ஜி ஆலை போன்றவை ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இது மீண்டும் ஒருமுறை காஷ்மீரின் சுற்றுச்சூழல் நெருக்கடியை உருவாக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிசக்தி நிலையங்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் மனித குலத்திற்கு நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
Edited by Siva