விஜய் எங்க போட்டியிட்டா எனக்கென்ன?.. கமல்ஹசன் பேட்டி!...
WEBDUNIA TAMIL March 21, 2026 12:48 AM


நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார். ஒரு சட்டமன்றத் தேர்தலிலும், ஒரு பாராளுமன்ற தேர்தலிலும் அவர்கள் கட்சி போட்டியிட்டது. சென்னை உள்ளிட்ட சில தொகுதிகளில் சில லட்ச வாக்குகளை இந்த கட்சி வாங்கினாலும் எந்த தொகுதிகளும் வெற்றி பெறவில்லை.

கட்சியின் தலைவர் கமல்ஹாசனே கோவையில் போட்டுவிட்டு தோல்வி அடைந்தார். அரசியல் கட்சி ஆரம்பித்தபோது திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்தார் கமல். ஆனால், 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றபின் அக்கட்சியை ஆதரிக்க துவங்கினார். இப்போது நாடு உள்ள நிலைமைக்கு திமுகவை ஆதரிப்பது எனது கடமை என கமலஹாசன் விளக்கம் அளித்தார்.

தற்போது திமுக சார்பில் அவருக்கு எம்பி பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று செய்தியாளரிடம் அவர் பேசிய போது ‘புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது.. நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு ‘அதைப் பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும்?.. நான் என் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னார் கமல்.

மேலும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்ததும் துவங்கும் எனவும் சொல்லியிருக்கிறார். அதோடு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை திமுகவுடன் நடந்து வருகிறது.. விரைவில் அதைப்பற்றி நானே தெரிவிப்பேன்’ எனவும் அவர் கூறியிருக்கிறார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.