”சாப்பிடுறது சமோசாவா? இல்ல விஷமா?” குப்பை போல் தயாரிக்கும் கொடூரம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!
SeithiSolai Tamil March 22, 2026 09:49 AM

ஹைதராபாத்தில் சுகாதாரமற்ற முறையில் மிகப்பெரிய அளவில் சமோசா தயாரித்து வந்த சட்டவிரோத தொழிற்சாலை ஒன்றை போலீசார் அதிரடியாக முறியடித்துள்ளனர். அந்த இடத்தில் நிலவிய அசுத்தமான சூழலும், சமோசாக்கள் தயாரிக்கப்பட்ட விதமும் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் எக்ஸ் வலைதளத்தில் வெளியாகி, இணையவாசிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் உண்ணும் உணவை எவ்வளவு அலட்சியமாகவும், சுகாதாரமின்றியும் தயாரித்து விற்பனை செய்துள்ளனர் என்பது இந்த வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது. லாபத்திற்காகப் பொதுமக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடிய இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதுபோன்ற உணவு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.