முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த முடிவை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் மீண்டும் அதிமுகவில் இணையத் தொடங்கியுள்ளனர். சிவகங்கை மாவட்ட ஓபிஎஸ் அணியின் நகரச் செயலாளர் சேகர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
இதேபோல், ஒன்றியச் செயலாளர்களான கனகராஜா, தியாகராஜன் மற்றும் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துத் தங்களை மீண்டும் அதிமுகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டனர். தனது நீண்டகால ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது ஓபிஎஸ் தரப்பிற்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் அரசியல் மாற்றங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.