48 மணி நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கனும்.. இல்லாவிட்டால்? டிரம்ப் எச்சரிக்கை..!
WEBDUNIA TAMIL March 22, 2026 12:48 PM

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் இப்பாதையை முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா அழித்துவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் ராணுவம், தங்கள் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் தொழில்நுட்பம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டியுள்ளது.

இதற்கிடையில், ஈரானின் நதான்ஸ் அணுமின் நிலையத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தற்காப்பு நடவடிக்கையாக, இஸ்ரேலின் டிமோனா அணுசக்தி மையம் அமைந்துள்ள பகுதிகளில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோதல் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.