திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது. ஆனால், திருக்கோவிலூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி விருப்ப மனு அளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
கடந்த 1989-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முதல் 2021 ஆம் ஆண்டு வரை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்ட பொன்முடி 06 முறை வெற்றி பெற்றுள்ளதோடு, 02 முறை தோல்விகளை சந்தித்துள்ளார்.
அத்துடன், 03 முறை திமுகவின் அமைச்சரவையில் முக்கிய துறைகளை கவனித்து வந்த பொன்முடி, சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதால், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பொன்முடி விருப்ப மனு அளிக்க்கவில்லை. ஆனால், அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதியில், அவரது மகன் கௌதம் சிகாமணி விருப்ப மனு அளித்துள்ளார்.