“எல்லா பந்துலயும் சிக்சர் அடிக்கிறோம்” – மைதானத்தில் மட்டுமல்ல பேச்சிலும் சிக்ஸர் அடித்த சஞ்சு…. வைரலாகும் வீடியோ….!!
SeithiSolai Tamil March 23, 2026 12:48 PM

ஐபிஎல் 2026 சீசனுக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், ‘Roar 26’ விழாவில் பங்கேற்ற சஞ்சு சாம்சன் தமிழில் பேசி ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளார். “இப்படி ஒரு அணியில் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி; அடுத்த இரண்டு மாதங்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டவர், தொடர்ந்து கிரிக்கெட் பாணியிலேயே, “பந்தைப் பார்த்து சுத்துறோம்; எல்லா பந்துலயும் சிக்சர் அடிக்கிறோம்; தட்டுறோம் தூக்குறோம்!” என அசல் சென்னைத் தமிழில் பேசி அதிர வைத்தார்.

சஞ்சு சாம்சனின் இந்தத் தமிழ் பேச்சு தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாகவே தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சஞ்சு, தற்போது தமிழிலேயே பேசி அவர்களின் மனதை மீண்டும் ஒருமுறை வென்றுள்ளார். வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் அவரது அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். “தட்டுறோம் தூக்குறோம்” என்ற அவரது அந்தப் பஞ்ச் வசனம் தற்போது மீம்ஸ் மற்றும் ரீல்ஸ்களில் ட்ரெண்டாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.