Top 10 News Headlines: முத்திரை தாள் கட்டுப்பாடுகள், கையெழுத்தாகும் தொகுதிகள், சாத்தான்குளம் வழக்கு - 11 மணி வரை இன்று
குலசேகரன் முனிரத்தினம் March 23, 2026 01:44 PM

திமுக கூட்டணியில் இன்று விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவில் கடந்த 17ம் தேதி தொடங்கிய  வேட்பாளர் நேர்காணலில் கடைசி நாளான இன்று 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 700க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனிடையே, பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னை வந்ததை அடுத்து, அதிமுக உடனான தொகுதிப் பங்கீடும் இன்று இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 6 ஆண்டு விசாரணைக்குப் பிறகு மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை சவரனுக்கு 5 ஆயிரத்து 360 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12 ஆயிரத்து 950 ரூபாய்க்கும் விற்பனை. ஒரு கிராம் 12 ஆயிரத்து 950 ரூபாய்க்கும் விற்பனை. 

ரூ.2 லட்சத்திற்கும் மேல் முத்திரைத்தாள் வாங்க PAN எண் கட்டாயம்; ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட மதிப்புகளில் முத்திரைத் தாள் வாங்குவோரின் விபரங்கள் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்
உயர்மதிப்புள்ள முத்திரைத் தாள் வாங்குவோர் அனைவரின் விபரங்களும் வருமான வரித்துறை பார்வைக்கு செல்லும் வகையில் விதியில் திருத்தம்

அசாம்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி.யைச் சேர்ந்த விமானப் படை ஊழியர் சுமித் குமார் கைது. கடந்த 3 ஆண்டுகளாக திப்ருகார் விமானப்படை தளத்தில் பணிபுரிந்து பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய விமானப் படையின் ரகசியத் தகவல்களை கசியவிட்டுள்ளார். குற்றச்செயலை கண்டறிந்து ராஜஸ்தான் புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

விமானப் பணியாளர்களுக்கு உடல் தகுதியை நிர்ணயம் செய்துள்ளது ஏர் இண்டியா நிறுவனம்.
மே 1ம் தேதி முதல் BMI தகுதி அமலுக்கு வரும் நிலையில், உடல் எடை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளவர்கள் சரிசெய்துக் கொள்ள காலக்கெடு.

அமெரிக்கா: நியூயார்க்கின் லகுவார்டியா விமான நிலைய ஓடுதளத்தில் தீயணைப்பு
வாகனம் மீது ஏர் கனடா விமானம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு. 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. விமானத்தில் இருந்த பயணிகள் அவசரகால கதவுகள் வழியே வெளியேற்றப்பட்டனர்.

ஈரானுக்கு எதிரான போருக்குத் தேவையான நிதி அமெரிக்காவிடம் ஏராளமாக உள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவிப்பு. பென்டகன் கோரியுள்ள ரூ.18 லட்சம் கோடி கூடுதல் நிதி குறித்துப் பேசிய அவர், இதற்காக அமெரிக்க மக்கள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், போர்ச் செலவுகளை அமெரிக்காவால் எளிதாகச் சமாளிக்க முடியும் என்றும் பேச்சு.

உலகளவில் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பாகிஸ்தான் முதலிடம். கடந்தாண்டில் மட்டும் பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களால் 1,139 பேர் பலியாகியுள்ளனர். அதே சமயம், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் 43% வரை குறைந்து, 13வது இடத்தில் உள்ளதாக தெரிவிப்பு.

ஐபிஎல் தொடரில் இருந்து காயத்தால் விலகிய ஆகாஷ் தீப்க்கு பதில் சவுரப் துபே என்ற வீரரை ஒப்பந்தம் செய்தது KKR அணி. சவுரப் துபே இதற்கு முன்பு SRH அணியில் இடம் பிடித்து இருந்தார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.