விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாலிபர் மரணம்!..
WEBDUNIA TAMIL March 24, 2026 01:48 AM


தவெக தலைவர் விஜய் எங்கு சென்றாலும் அவர் வாகனத்தின் முன்னும் பின்னும் மற்றும் இரு பக்கங்களிலும் தவெக தொண்டர்களும் ரசிகர்களும் இரு சக்கர வாகனங்களில் வலம் வருகிறார்கள். குறிப்பாக அவரின் வாகனத்துக்கு முன்னால் சென்று செல்பி எடுப்பதை பலரும் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து விஜயின் வாகனத்துக்கு முன்னும், பின்னும் இரு பக்கங்களிலும் வாகனங்களில் யாரும் பின் தொடரக்கூடாது என காவல்துறை கட்டுப்பாடு விதித்தது..

வேலூரில் பேசும்போது விஜய் ‘என் வாகனம் பின்னால் வர வேண்டாம்’ என்று கூறினார். ஆனால் அவர் சொல்வதை தவெக தொடர்களும், விஜய் ரசிகர்கலும் கேட்பதே இல்லை. சில நாட்களுக்கு முன்பு விஜய் தஞ்சாவூர் சென்றபோதும் அவரின் வாகனத்திற்கு முன்னும், பின்னும், இரு பக்கத்திலும் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அவரின் வாகனத்தை ஒட்டியபடி வந்தார்கள்.

அப்போது முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதி விக்னேஷ் என்கிற வாலிபர் பலத்த காயமடைந்தார். அதன்பின் அவர் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 19 நாட்கள் மருத்துவமானியில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் மரணம் அடைந்திருக்கிறார்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.