கெண் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இயக்குநராகவும் நடிகராகவும் கென் பாராட்டுக்களை குவித்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பயங்கர வைரலாகியுள்ள நிலையில் படத்தின் பாடல் ஒன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற கானா பாடல் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கானா பாடகர் தினேஷ் குற்றம்சாட்டியுள்ளார்
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த கென் அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்து கவனமீர்த்தார். தற்போது யூத் படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்துள்ளார். பள்ளி வாழ்க்கையில் நடக்கும் ரகளை , காதல் , ஏமாற்றம் என நகைச்சுவை எமோஷன் கலந்த படமாக யூத் படம் உருவாகியுள்ளது. நடிப்பு , ஹ்யூமர் , நடனம் , என பக்கா கமர்சியல் படம் ஹீரோ மெட்டிரீயலாக கென் தன்னை நிரூபித்துள்ளார். யூத் திரைப்படம் 4 நாட்களில் இப்படம் 28 கோடி வரை வசூல் செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் சொதப்பி வந்தாலும் இளம் தலைமுறையினர் கலக்கி வருகிறார்கள். சின்ன பட்ஜெட்டில் படங்களை உருவாக்கி பெரிய வசூலை கொடுத்து வருகிறார்கள். பிரதீப் ரங்கநாதன் , அபிஷன் ஜீவிந்த் , வரிசையில் தற்போது கென் இணைந்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் வைரலாகியுள்ளன. இது தவிர்த்து படத்தில் சில விண்டேஜ் பாடல்களும் பயண்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 'நான் ஆசபட்ட பொண்ணு பேரு மோனிஷா' என்கிற பாடலுக்கு கென் நடனமாடியுள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன் இந்த பாடலை கானா பாடகர் தினேஷ் உருவாக்கினார். டிவோ நிறுவனம் இந்த பாடலை ஆல்பம் பாடலாக வெளியிட்டுள்ளது. தனது அனுமதி இல்லாமல் தனது பாடலை யூத் படத்தில் பயன்படுத்தியுள்ளதாக கானா தினேஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். யூத் படத்தில் எனது பாடல்..' 'ஆசைப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா' என்ற எனது பாடல் 12 வருடத்திற்கு முன்னால் பாடப்பட்டு மிகவும் பிரபலமாக இருந்தது இந்தப் பாடலை கருணாஸ் மகன் கென் நடித்து புதிதாக வெளியாகி உள்ள ‘யூத்' படத்தில் எனது அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர்; இதனால் நான் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன்" என கானா தினேஷ் தெரிவித்துள்ளார்.