தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி கொரோனா கார்காத்த கட்ட விதிமுறைகளை மீறி கடையை அதிகம்நேரம் திறந்து வைத்ததாக குற்றச்சாட்டில் காவல் துறையிடம் வாக்குவாதத்தில் எடுப்பட்டுள்ளார்.
இதனையடுத்து காவல்துறை இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விசாரணையின்போது பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதாலேயே இருவரும் பலியானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து தந்தை-மகன் லாக்கப் டெத் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரடப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 09 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்தது. அதன்படி, இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 09 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில், 105 சாட்சியங்களில் பெரும்பாலான சாட்சியங்கள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு எதிராகவே இருந்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் ஜாமீனில் விடுவிக்கக் கோரிய மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.