பொதுவாகவே ஒரு நடிகர் அதுவும் ஒரு பிரபலமான நடிகர் அரசியலுக்கு வந்தால் ஏற்கனவே அரசியலில் இருக்கும் அதிமுகவும், திமுகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அந்த நடிகரை மிகவும் மோசமாக விமர்சிப்பார்கள். இதை எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜயகாந்த் என எல்லோருமே சந்தித்தார்கள் தற்போது இந்த விமர்சனங்களை விஜயும் சந்தித்து வருகிறார்..
2026 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடவிருக்கிறது. குறிப்பாக விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. அந்த தொகுதியில் தற்போது திமுகவை சேர்ந்த ஆர்.டி. சேகர் எம்எல்ஏவாக இருக்கிறார் .
2021 சட்டமன்ற தேர்தலிலும் அவர்தான் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். எனவே பெரம்பூர் தொகுதி திமுகவின் கோட்டையாக இருக்கும் நிலையில்தான் விஜய் அங்கு போட்டியிட முடிவெடுத்திருக்கிறார். இந்த முறையும் ஆர் டி சேகருக்கு அந்த தொகுதியில் சீட் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் இந்த தொகுதியை பாமக பாமகவுக்கு கொடுத்திருக்கிறது அதிமுக. அதாவது, பெரம்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிடவில்லை. பாமக சார்பாக ஒரு வேட்பாளர் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது.