நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கியிருந்தாலும் அவர் மற்ற அரசியல்வாதிகளை போல மற்ற மக்களை சந்திப்பதில்லை, மக்கள் பிரச்சனைகளை பேசுவதில்லை, போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை, செய்தியாளர்களை சந்திப்பதில்லை, பேட்டி கொடுப்பதில்லை என அவர் மீது பல விமர்சனங்கள் இருக்கிறது.
ஆனால், இதுபற்றி விஜய் எந்த விளக்கமும் கொடுப்பதில்லை. யார் என்ன வேணாலும் பேசட்டும்.. நான் இப்படித்தான் இருப்பேன் என்கிற மனநிலையில்தான் விஜய் இருக்கிறார்.. அவர் நடிகராக இருந்தவரை அது ஓகே.. ஆனால் ஒரு அரசியல்வாதியாக அது அவருக்கு செட் ஆகுமா என்பது தெரியவில்லை..
நாம் மற்ற அரசியல்வாதிகளை போல நடந்து கொள்ளவில்லை என்றாலும் மக்கள் நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கையில் விஜய் இருக்கிறார். தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது. கண்டிப்பாக 234 தொகுதிகளுக்கும் விஜய் செல்ல வாய்ப்பில்லை.
எனவே, தவெகவுக்கு வேறு பிளான் இருக்கிறது. சில இடங்களில் மட்டும் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தான் போட்டியிடவுள்ள பெரம்பூர் தொகுதியில் விஜய் வருகி 29ம் தேதி பிரச்சாரம் செய்வார் என சொல்லப்படுகிறது. மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களின் பெயர்களை சொல்லி ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் வேட்பாளர்களுக்காக விஜய் வாக்கு சேகரிப்பது போல வீடியோக்களும் ரெடியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.