அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக, தமாக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராசிபுரம் (தனி), பத்மநாபபுரம், குளச்சல், ராமநாதபுரம், மானாமதுரை (தனி), அறந்தாங்கி, திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஆவடி , விளவங்கோடு, நாகர்கோயில், ராதாபுரம், வாசுதேவநல்லூர் (தனி), திருச்செந்தூர், சாத்தூர், மதுரை தெற்கு, திருப்பத்தூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி), கோயம்புத்தூர் வடக்கு, திருப்பூர், அவிநாசி (தனி), உதகமண்டலம், மொடக்குறிச்சி, தளி, மயிலாப்பூர் ஆகிய 27 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதில் கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்பட்டால், சென்னை நகரில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் ஒரேயொரு தொகுதி மட்டுமே, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் என்று கூறப்படும் சென்னையில் ஒரேரு தொகுதி ஒதுக்கப்பட்டு இருப்பது, பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மயிலாப்பூர் தொகுதியை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கியிருக்கிறது.இந்துக்கள் அதிகமாக இருக்கும் தொகுதி என்பதனால், தங்களால் மயிலாப்பூர் தொகுதியில் கூடுதல் ஓட்டுகளை பெற்று, வெற்றி வாய்ப்பை பெற முடியும் என்று பாஜக இந்த தொகுதிக்கு முறையிட்டுள்ளதாக தகவலும் வெளியாகி இருக்கிறது.