ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதால் உலகெங்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டிருக்கிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவவை கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ஒருபக்கம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் கடல் வழியை ஈரான் அரசு மூடிவிட்டது. அதேநேரம் இந்திய கப்பல்கள் கொண்டு செல்லலாம் என ஈரான் அறிவித்தாலும் பழையபடி கச்சா எண்ணெய் விநியோகம் நடைபெறவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் பல உணவுகள் மூடப்பட்டிருக்கிறது..
பெட்ரோல் நிறுவனமான நயாரா பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டீசல் ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் உயர்த்தியிருக்கிறது. இதையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 107.93க்கும் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை 3 உயர்ந்து 97.22 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
. இந்த விலை உயர்வு பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.