விஜய்கிட்ட ஒரு மாஸ்டர் பிளான் இருக்கு!.. வெயிட் பண்ணுங்க!.. பிரபலம் பேட்டி...
Webdunia Tamil March 26, 2026 02:48 PM


நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். தமிழ் சினிமாலிருந்து பலரும் அரசியலுக்கு வந்து நாட்டை ஆண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என தமிழக முதலமைச்சராக இருந்த எல்லோருமே சினிமா துறையிலிருந்து வந்தவர்கள்தான். ஆனாலும் புதிதாக ஒரு நடிகர் மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்கிற எண்ணத்தோடு வரும்போது அவர் மீது பல விமர்சனங்களும் இங்கே வைக்கப்படுகிறது., அப்படி நடிகர் விஜயின் மீதும் பல விமர்சனங்களை பலரும் வைக்கிறார்கள்.

இனிமேல் நடிகன் நாடாள முடியாது.. ரசிகர்கள் கூட்டம் வாக்காக மாறாது.. நடிகைங்களுக்கு கூடத்தான் கூட்டம் வரும்.. இவர்களுக்கு அரசியல் அறிவில்லை.. என்றெல்லாம் பலரும் பேசுகிறார்கள். இந்நிலையில், தமிழில் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் சண்டை பயிற்சி இயக்குனர் பெப்சி விஜயன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய கருத்தை கூறியிருக்கிறார்..

விஜயை உலகம் முழுக்க தெரியும்.. இங்கு யாரும் கொள்ளையடிக்க வரவில்லை.. நல்லது பண்ணனும் என்கிற எண்ணத்தில்தான் வராங்க.. என்னை வாழ வைத்த மக்களுக்கு ஏதாவது பண்ணனும்னு வறாங்க.. நீ அதுக்கு முன்னாடி மக்களுக்கு என்ன பண்ணன்னு கேள்வி கேக்குறாங்க.. உன்ன கொண்டாடின மக்களுக்கு நீ இதுவரைக்கும் என்ன பண்ணி இருக்கன்னு கேள்வி கேக்குறாங்க.. பண்ணதானே வந்திருக்காரு பண்றாரா இல்லையா என்று பார்ப்போம்.. கேள்வி கேளுங்க.. பண்றதுக்கு முன்னாடியே கேள்வி கேட்டா எப்படி? வரவங்கள நீங்க தடுக்காதீங்க.. விஜய் வரட்டும்.. விஜய் கிட்ட ஏதோ ஒரு மாஸ்டர் பிளான் இருக்கு’ என பேசியிருக்கிறார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.