ரூ.10,000 வரை குறையும் தங்கம்…! இதுதான் நகை வாங்க சரியான டைம்… இன்னும் 6 மாசத்துக்கு கணிக்கவே முடியாது… ஆனந்த் சீனிவாசனின் ரூட் மேப்…!!
SeithiSolai Tamil March 26, 2026 02:48 PM

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை சரிவு தற்காலிகமானதா அல்லது நீண்ட காலத்திற்கு நீடிக்குமா என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் தளத்தில் விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். அதாவது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்காசியப் போரை நிறுத்த விரும்புவதாகக் கூறினாலும், கள யதார்த்தம் வேறாக இருப்பதாக ஆனந்த் சீனிவாசன் சுட்டிக்காட்டுகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

“ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. போரில் அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பது அந்நாட்டு மக்களிடையே டிரம்ப் மீது கோபத்தை உண்டாக்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா முயல்கிறது, ஆனால் ஈரான் அதனை ஒருபோதும் அனுமதிக்காது. பங்குச் சந்தையைச் சமாளிக்கவே டிரம்ப் சமாதானப் பேச்சுக்களைப் பற்றிப் பேசி வருகிறார்.

சர்வதேசச் சந்தையில் டாலரின் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை குறையும் என்பது உலகளாவிய விதி. தற்போது கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் மட்டுமே தங்கம் விலை நிரந்தரமாகக் குறைய வாய்ப்புள்ளதாக அவர் கருதுகிறார். தங்கத்தின் விலை வீழ்ச்சி குறித்து அவர் வெளியிட்டுள்ள முக்கியக் கணிப்புகள். 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 11,000 வரை குறைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஒருவேளை மேற்காசியப் போர் இன்னும் தீவிரமடைந்தால், தங்கம் விலை ரூ. 10,000 வரை கூடச் சரியக்கூடும். தங்கம் விலை மிகக் குறைந்த நிலையை எட்டும் போது, சீனா தனது டாலர் இருப்பை விற்றுத் தங்கத்தை வாங்கத் தொடங்கும். இதனால் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும்.

தங்கம் விலை நீண்ட கால நோக்கில் மீண்டும் உயரவே செய்யும் என்பதால், இந்தச் சரிவைப் பயன்படுத்தி பொதுமக்கள் சிறுகச் சிறுகத் தங்கத்தை வாங்கலாம் என அவர் அறிவுறுத்துகிறார். “விலை இன்னும் குறையும் என்று காத்திருந்தால், மிகக் குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பைத் தவறவிட நேரிடலாம். ஏனெனில் சரிவின் இறுதிப் புள்ளியை யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாது,” என்றும் அவர் எச்சரித்துள்ளார். ம்மேலும் அடுத்த 6 மாதங்களுக்குத் தங்கம் விலை ஒரு பெரும் சரிவைச் சந்தித்து, அதன் பிறகே மீண்டும் ஏற்றப் பாதையில் செல்லும் எனத் தெரிகிறது என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.