ஆசியாவின் சிறந்த 50 உணவகங்கள் பட்டியல்.. இந்தியாவின் 2 உணவகங்களுக்கு இடம்..!
Webdunia Tamil March 26, 2026 02:48 PM

ஆசியாவின் சிறந்த 50 உணவகங்கள் 2026 பட்டியல் ஹாங்காங்கில் வெளியிடப்பட்டது. இதில் இந்திய உணவகங்கள் முதல் 30 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளன.

மும்பையின் புகழ்பெற்ற 'மாஸ்க்' உணவகம் கடந்த ஆண்டை விட முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளது. நவீன இந்திய உணவு வகைகளுக்கு பெயர்பெற்ற இந்த உணவகம், உபசரிப்பு கலை விருதினையும் வென்றுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தின் கசௌலியில் உள்ள செஃப் பிரதீக் சாதுவின் 'நார்' உணவகம் 30-வது இடத்தை பிடித்து உலகளாவிய கவனத்தை பெற்றுள்ளது.

தாய்லாந்தில் உள்ள இந்திய செஃப் ககன் ஆனந்தின் உணவகங்கள் முதல் 10 இடங்களுக்குள் இரண்டு இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளன. பாங்காக்கில் உள்ள 'ககன்' 3-வது இடத்தையும், 'ககன் அட் லூயிஸ் உய்ட்டன்' 8-வது இடத்தையும் பிடித்துள்ளன. மேலும், தாய்லாந்தின் சிறந்த உணவகமாகவும் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மும்பை முதல் இமயமலை அடிவாரம் வரை இந்திய உணவுகள் சர்வதேச அளவில் புதிய உச்சத்தை தொட்டு வருவது இந்திய சமையல் கலைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.