கடந்த 2021 தேர்தலை போன்று இந்த முறையும் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
கடந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் இடம்பிடித்திருந்த பா.ஜ.க கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டது. தற்போதும் கூட்டணியில் உள்ள பா.ஜ.க இந்த முறை 2 தொகுதிகளை கோவையில் எதிர்பார்க்கிறது.
குறிப்பாக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் கோவையில் 2 தொகுதிகளை கட்டாயம் பா.ஜ.க எதிர்பார்த்திருப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.ஆனால் இந்த முறையும் கோவையில் ஒரு தொகுதி மட்டுமே பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது.
ஆகையால் அந்த தொகுதியில் யார் வேட்பாளராக நிற்பார்கள் என கேள்வி எழுந்தது..வானதி சீனிவாசன் அல்லது அண்ணாமலை யார் நிற்பார்கள் என தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறி அண்ணாமலை, பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் ரேஸில் இருந்து அண்ணாமலையின் விலகல் முடிவால் அவரது ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அண்ணாமலை போட்டியிட விரும்பிய கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் அல்லது சொந்த தொகுதியான அரவக்குறிச்சி பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்பதே இம்முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.