தமிழகத்தில் மீண்டும் வெப்பம்...! அடுத்த 2 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும்...! - வானிலை மையம் எச்சரிக்கை
Seithipunal Tamil March 26, 2026 06:48 PM

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கிறது. நாளை முதல் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலை நிலவும் நிலையில், மார்ச் 28 முதல் 31 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனால் சில பகுதிகளில் மட்டும் சற்றே குளிர்ச்சி உணரப்படலாம்.இந்நிலையில், மாநிலத்தின் பல இடங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34°C வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.