விருதுநகரில் நீச்சல் பயிற்சி: 2026 கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு!
அருண் சின்னதுரை March 26, 2026 08:44 PM

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான  கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. - என மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, “கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள்–2026 (LEARN TO SWIM)” ஏப்ரல் 2026 முதல் ஜூன் 2026 வரையிலான விடுமுறைக் காலத்தில், மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சலை ஒரு அத்தியாவசிய வாழ்வியல் திறனாக உருவாக்கும் நோக்கில், தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீச்சல் குளங்களிலும் 'நீந்தக் கற்றுக்கொள்' பயிற்சி வகுப்பை நடத்திடுவதற்கு திட்டமிட்டுள்ளது.    

2026-ஆம் ஆண்டிற்கான கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு பயிற்சிக் கட்டணமாக ரூ.1770- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும் கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் மேற்குறிப்பிட்டுள்ள கால அட்டவணையின்படி பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கலாகிறது. மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் நீச்சல் பயிற்றுநர் சுப்ரமணியன் அவர்களை 9751393412 என்ற அலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.   

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.