தரை வழி தாக்குதல் நடந்தால் உங்கள் வீரர்கள் காணாமல் போவார்கள்!. அமெரிக்க, இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!...
Webdunia Tamil March 26, 2026 06:48 PM


அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை வைத்துக் கொள்ளக் கூடாது என சொல்லி ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பல நாட்களாகவே தாக்குதல் நடத்தி வருகிறது.
பதிலுக்கு ஈரானும் இஸ்ரேலை தாக்கி வருவதோடு அமெரிக்க படைகளுக்கு இடம் கொடுத்த வளைகுடா நாடுகளையும் தாக்கி வருகிறது. இதனால் சவுதி அரேபியா, துபாய், பஹ்ரைன், அபுதாபி ஆகிய நாடுகளில் பல பகுதிகள் சேதமடைந்திருக்கிறது.. குறிப்பாக பல எண்ணெய் கிணறுகள் தீப்பிடித்து எரிகிறது.

இதையடுத்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் சமையல் சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக பல உணவகங்கள் மூடப்பட்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்திருக்கிறது. இதுவரைக்கும் ஈரான் நாட்டின் மீது வான்வளி தாக்குதலை மட்டுமே அமெரிக்காவும் இஸ்ரலும் நடத்தியது. இந்நிலையில்தான் ஈரானை தரை வழியாக சென்றும் எங்கள் வீரர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என அமெரிக்காவும், இஸ்ரேலும் அறிவித்திருக்கிறது..

இந்நிலையில், எங்கள் நாட்டுக்குள் ஊடுருவினால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டு மறைந்து போவார்கள் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.