உலகில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து, எரிபொருள் பற்றாக்குறையால் ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு போரில் கூட ஈடுபடாத சில நாடுகள் இன்றும் அமைதியாகவும் செல்வந்த நாடுகளாகவும் திகழ்கின்றன. இதில் முதலாவதாக ‘சான் மரினோ’ என்ற சிறிய நாடு உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலும், இந்த நாடு தனது வரலாற்றில் யாரிடமும் போரிட்டதில்லை.
வெறும் 61 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், சுமார் 34,000 மக்கள் தொகையும் கொண்ட இந்நாட்டு மக்கள், உலகின் பெரும் பணக்காரர்களாகக் கருதப்படுகிறார்கள்.
அதேபோல், இயற்கை அழகு நிறைந்த ‘ஐஸ்லாந்து’ மற்றும் ‘லீக்கன்ஸ்டைன்’ ஆகிய நாடுகளும் எந்தவொரு போரிலும் பங்கேற்காமல் அமைதி காத்து வருகின்றன. 1944-ல் சுதந்திரம் பெற்ற ஐஸ்லாந்து நாட்டின் தனிநபர் வருமானம் சுமார் $88,000 ஆகும்.
இந்தப் பட்டியலில் மூன்றாவதாக உள்ள லீக்கன்ஸ்டைன் நாட்டின் மக்களின் சராசரி ஆண்டு வருமானம் சுமார் $200,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. போரினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் பொருளாதாரச் சரிவுகளையும் சந்திக்காமல், இந்த நாடுகள் தங்களது அமைதியான கொள்கையினால் உலக அளவில் தனித்து நிற்கின்றன.