நாளை தொடங்கும் ஐபிஎல் திருவிழா…! புதிய பலத்துடன் களமிறங்கும் சிஎஸ்கே...! - முழு அட்டவணை வெளியீடு..!
Seithipunal Tamil March 27, 2026 09:48 PM

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை (மார்ச் 28) முதல் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. ரசிகர்களின் கண்கள் அனைத்தும் மீண்டும் மைதானத்தை நோக்கி திரும்பியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பயணம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த சீசனை முன்னிட்டு சிஎஸ்கே அணி பல முக்கிய மாற்றங்களை செய்து, புதிய உற்சாகத்துடன் களமிறங்குகிறது. இளம் திறமைகள் மற்றும் அனுபவம் மிக்க வீரர்கள் இணைந்துள்ளதால், இந்த முறை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சமநிலை கொண்ட சக்திவாய்ந்த அணியாக சிஎஸ்கே உருவெடுத்துள்ளது.

கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அணியை வழிநடத்த, அனுபவசாலி தோனி உட்பட பல முக்கிய வீரர்கள் அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.தோனி, டெவால்ட் பிரேவிஸ், கலீல் அகமது,உர்வில் படேல்,மேத்யூ ஷார்ட், நூர் அகமது,சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, கார்த்திக் சர்மா,  ஜேமி ஓவர்டன் உள்ளிட்ட திறமையான வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இவர்களில் பலர் ஆடும் லெவனில் களமிறங்க வாய்ப்பு அதிகம் என்பதால், அணியின் ஆட்டத் திறன் குறித்து ரசிகர்களிடம் பெரும் நம்பிக்கை நிலவுகிறது.இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் லீக் சுற்று போட்டி அட்டவணை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது:
மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சிஎஸ்கே - குவஹாட்டி
ஏப்ரல் 3 - பஞ்சாப் கிங்ஸ் vs சிஎஸ்கே - சென்னை
ஏப்ரல் 5 - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு vs சிஎஸ்கே - பெங்களூரு
ஏப்ரல் 11 - டெல்லி கேபிடல்ஸ் vs சிஎஸ்கே - சென்னை
ஏப்ரல் 14 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சிஎஸ்கே - சென்னை
ஏப்ரல் 18 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சிஎஸ்கே - ஹைதராபாத்
ஏப்ரல் 23 - மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே - மும்பை
ஏப்ரல் 26 - குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே -அகமதாபாத்
மே 2 - மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே - சென்னை
மே 5 - டெல்லி கேபிடல்ஸ் vs சிஎஸ்கே - டெல்லி
மே 10 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சிஎஸ்கே-சென்னை
மே 15 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சிஎஸ்கே - லக்னோ
மே 18 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சிஎஸ்கே - சென்னை
மே 21 - குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே- சென்னை
புதிய அணிச்சேர்க்கைகள், வலுவான கேப்டன்சி, மற்றும் அனுபவத்தின் கலவையுடன் களமிறங்கும் சிஎஸ்கே, இந்த சீசனில் மீண்டும் கோப்பையை கைப்பற்றுமா என்பது ரசிகர்களின் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.