விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மாணவி ரோகிணி, பாட்டி திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ரோகிணி, சம்பவத்தன்று வீட்டில் வேலை செய்யாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அவரது பாட்டி சந்திரா, ஏன் வேலை செய்யவில்லை எனக் கேட்டுத் திட்டியுள்ளார். பாட்டி திட்டியதால் கடும் மனவேதனை அடைந்த ரோகிணி, வீட்டில் இருந்த விஷத்தைக் குடித்து மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக முதலில் சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.