சமூக வலைதளங்களில் தற்போது ஒரு ராபிடோ டிரைவர் மற்றும் பெண் பயணிக்கு இடையே வாட்ஸ்அப்-பில் நடந்த உரையாடல் ஸ்கிரீன்ஷாட் செம வைரலாகி வருகிறது.
அந்தப் பெண் தனது பயணத்திற்குப் பிறகு அந்த டிரைவரிடம், “அண்ணா உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையா?” என்று ஒரு குசும்பான கேள்வியைக் கேட்டுள்ளார்.
View this post on Instagram
A post shared by Aayush Raj (@trendy_larka2267)
அதற்கு அந்த டிரைவர் சற்றும் யோசிக்காமல், “இல்லை, ஆனால் உங்களைப் போன்றவர்கள் எல்லாம் ‘அண்ணா’ என்று கூப்பிடுவதைப் பார்த்தால், எனக்குக் கல்யாணம் ஆகும் என்று தோன்றவில்லை” என நக்கலாகப் பதிலளித்துள்ளார்.
இதைக் கேட்ட அந்தப் பெண் வாயடைத்துப் போனதுடன், “சாரி அண்ணா” எனப் பதிவிட்டு அந்த உரையாடலை முடித்துள்ளார். இந்தச் சிரிப்பலையை உண்டாக்கும் உரையாடல் தற்போது நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் வேடிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.