அமெரிக்கா, இஸ்ரேல் தொடர் தாக்குதல்!.. ஈரானில் 1937 பேர் பலி!..
Webdunia Tamil March 28, 2026 02:48 AM


கடந்த மாதம் 28ம் தேதி முதல் ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த போர் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் அமெரிக்காவுக்கு இராணுவ தடங்கள் அமைக்க இடம் கொடுத்துள்ள வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. அவ்வப்போது இஸ்ரேல் நாட்டின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியானாலும் போர் நின்றபாடில்லை.

இந்த போர் காரணமாக இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் தடைப்பட்டிருப்பதால் சமையல் சிலிண்டர், பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலால் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 1900-ஐ கடந்துவிட்டது. இதுவரை 1937 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 20 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்..

நேற்று இஸ்ரேலின் வான்வளி தாக்குதலில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மக்கள் வசிக்கும் கட்டிடங்கள் உருக்குலைந்து போயிருக்கிறது.. இடுபாடுகளை சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.