Jananayagan: ஜனநாயகன் மே மாசமும் ரிலீஸ் இல்லையாம்!.. எப்ப ரிலீஸ் தெரியுமா?…
CineReporters Tamil March 28, 2026 02:48 AM

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். ஏனெனில் அவர் அரசியலுக்கு சென்று விட்டதால் ஜனநாயகன் விஜயின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது.
இப்படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனதால் படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் ஒரு மாத காலமாகியும் சாதகாமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதால் வழக்கை வாபஸ் பெற்றதோடு மறு தணிக்கைக்கு விண்ணப்பித்தார்..

அதேநேரம் இப்போது வரை படத்திற்கு சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.. படத்தில் சில அரசியல் கட்சிகள் காட்சிகள் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்கிறது தணிக்கை வாரியம். தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால் ஜனநாயகன் கிடப்பில் கிடக்கிறது. எப்படியும் தேர்தல் முடிந்தவுடன் மே மாசம் இந்த படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான், மே மாதமும் ஜனநாயகன் வெளியாகாது என்பது தெரிய வந்திருக்கிறது..

ஏனெனில், இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. அதேபோல், படத்தின் வினியோக உரிமையை வாங்கியிருந்த வினியோகஸ்தரும் உரிமையை ரத்து செய்துவிட்டார். எனவே, புதிய ஒப்பந்தம் போடப்படவேண்டும். அதற்கு சில மாதங்கள் அவகாசம் எடுக்கும்.

ஒருபக்கம், இந்த படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடெக்ஷன் நிறுவனம் Toxic மற்றும் KD The Devil ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. இந்த படங்கள் மே, ஜூன் மாதங்களில் வெளியாகிறது. எனவே ஜனநாயகன் திரைப்படம் ஜூலை மாதம்தான் வெளிவரும் என்கிறார்கள்..

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.