“அதுக்கு விஜய் என்ன செய்ய முடியும்!”… ஜூலியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பெண்மணி.. இணையத்தில் வைரலாகும் பதிலடி வீடியோ..!!
SeithiSolai Tamil March 28, 2026 01:48 AM

பிக்பாஸ் பிரபலம் ஜூலிக்கும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ஆதரவாளர்களுக்கும் இடையேயான மோதல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பரப்புரை மற்றும் தஞ்சாவூர் பயணத்தின் போது நிகழ்ந்த விபத்து குறித்து ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக, விஜய்யைப் பின்தொடர்ந்து சென்ற மாணவர் விபத்துக்குள்ளானதைச் சுட்டிக்காட்டி ஜூலி பேசிய விதம் விஜய் ரசிகர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இளம்பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து ஜூலியை வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், ஜூலி ஏற்கனவே தனக்கு எதிராக வரும் ஆபாச விமர்சனங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.