காளியம்மாளுக்கு சீட் மறுப்பு- 17 பெண்களுக்கு மட்டுமே அதிமுக வாய்ப்பு
Top Tamil News March 27, 2026 09:48 PM

இதுவரை அதிமுக வேட்பாளர் பட்டியலில் 17 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை அதிமுக 148 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இன்னும் 19 தொகுதிகளில் அறிவிக்கவில்லை. குறிப்பாக, அதில் 16 தொகுதிகள் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவை. சென்னையின் 16 தொகுதிகளில் 3 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுத்துள்ளது. மீதமுள்ள 13 தொகுதிகளில் ராயபுரம் தொகுதியில் வேட்பாளராக ஜெயக்குமார் ஏற்கனவே அறிவித்துள்ளார். மீதமுள்ள 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்த முறையும், அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்துள்ளது.

இதுவரை அதிமுக வேட்பாளர் பட்டியலில் 17 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாதகவிலிருந்து வந்த காளியம்மாளுக்கு பூம்புகார் அல்லது மயிலாடுதுறை தொகுதியில் ஏதாவது 1 சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்களில் ஒரே ஒரு இஸ்லாமியர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக சையது சுல்தான் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.