அறிவாலயத்தில் அக்கப்போரு!.. திமுக தொகுதி பட்டியலை வெளியிடுவதில் தாமதம்!..
Webdunia Tamil March 28, 2026 03:48 PM


2026 சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை திமுக வழக்கத்திற்கு மாறாக அதிகமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. குறிப்பாக இந்த முறை மக்கள் நீதி மையம், தேமுதிக போன்ற புதிய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. பல பஞ்சாயத்துகளுக்கு பின் காங்கிரசுக்கு 28 தொகுதிகளையும், தேமுதிகவுக்கு 10 தொகுதிகளையும், விடுதலை சிறுத்தைக்கு 8 தொகுதிகளையும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளையும் ஒதுக்கியிருக்கிறது திமுக..

மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு போன்ற கட்சிகளுக்கு குறைவான தொதகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது அந்த கட்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வேலை முடிந்தாலும் யாருக்கு எந்த தொகுதிகளையும் ஒதுக்குவது என்பதில் தற்போது இழுபறி நீடித்து வருகிறது. அதில் விடுதலைச் சிறுத்தை, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறது என்பது முடிவாகிவிட்டது. ஆனால் காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளுடன் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது..

இந்த மூன்று கட்சிகளும் கேட்கும் முக்கிய தொகுதிகளை திமுகவால் ஒதுக்க முடியவில்லை. ஏனெனில் அந்த தொகுதிகளில் திமுக போட்டியிட விரும்புகிறது. காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ள 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. ஆனால் மீதியுள்ள 5 தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதிகளை கேட்கிறது காங்கிரஸ். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், கிளியூர் ஆகிய இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் கேட்கிறது. ஆனால் அந்த தொகுதிகளில் திமுக போட்டியிட முடிவு செய்திருக்கிறது. எனவே சிக்கல் நீடித்துவருகிறது..

அதேபோல் ரிஷிவந்தியம், விருகம்பாக்கம், ஆம்பூர் ஆகிய மூன்று தொகுதிகளையும் பிரேமலதா கேட்கிறார். ஆனால் இந்த மூன்று தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும் என நினைக்கிறது. எப்படியும் இன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.