நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். அவர் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. அதேநேரம் விஜய் மற்ற அரசியல்வாதிகளிலிருந்துது வேறுபட்டிருக்கிறார்.. அதாவது மற்ற அரசியல்வாதிகள் போல மக்களை சந்திப்பதில்லை.. மக்கள் பிரச்சனைகளை பேசுவதில்லை.. போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.. வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.. என்கிற பல புகார்களும், விமர்சனங்களும் அவர் மீது இருக்கிறது.. ஆனால் அவர் எதற்கும் பதில் சொல்வதில்லை..
நாம் ஒரு பிரபலமான நடிகர்.. நமக்கு பின்னால் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.. மக்களின் ஆதரவு, குறிப்பாக பெண்களின் ஆதரவு நமக்கு இருக்கிறது, நாம் பிரச்சாரம் செய்ய விட்டாலும் கூட மக்கள் நமக்கு ஓட்டு போடுவார்கள் என விஜய் நினைக்கிறார்.. குறிப்பாக திமுகவின் வாக்குகளை பிரித்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதை அவரின் ஒரே நோக்கமாக இருக்கிறது. ஒருபக்கம், தேர்தல் நெருங்கும் நிலையில் இன்று அவர் பெரம்பூர் தொகுதியில் செய்யவிருந்த பிரச்சரம் செய்யப்பட்டிருக்கிறது. விஜய் பேசும் இடம் குறுகலான இடம் என்பதால் நிறைய பேர் வந்து கரூரை போல அசம்பாவிதம் ஏற்பட்டால் என்னாவது என தேர்தல் ஆணையம் நினைக்கிறது. ஆனால் அதை திமுக பக்கம் திருப்பி விட்டார் விஜய்..
ஒருபக்கம் 234 தொகுதிகளிலும் விஜய் பிரச்சாரம் செய்வாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் விஜய் அப்படியெல்லாம் எல்லா இடத்திலும் போய் பேசும் நபர் கிடையாது.
இன்று 5 இடங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார் விஜய். ஆனால் பெரம்பூரில் அனுமதி மறுக்கப்பட்டதால் மற்ற 4 இடங்களிலும் பிரச்சாரம் செய்ய விஜய் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டார் விஜய். இரண்டு நாட்களை வீணடித்து விட்டு வருகிற 30தேதி மீண்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டிருக்கிறார்..
விஜய் நல்ல வாய்ப்பு அனைத்தையும் விட்டுவிட்டு இரண்டு வாரங்கள் மட்டும் பிரச்சாரம் செய்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் விஜய்.. 234 தொகுதிகளில் ஒரு முறையாவது ஒரு இடத்திலாவது முகத்தை காட்டினால்தான் வாக்குகள் கிடைக்கும்.. குறைந்தபட்சம் 120 தொகுதிகளுக்காவது செல்ல வேண்டும்.. மீதமுள்ள 25 நாட்களில் மொத்த தொகுதிகளையும் விஜயால் சுற்றிவர முடியாது..
எனவே வீணாக அவருக்கு செலவு செய்வதையும் அவருக்காக ஓட்டுபோடுவதையும் தவிர்ப்பது நல்லது என திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலரோ, தேர்தல் வரட்டும். பாருங்க.. எங்க தலைவர் பக்கா மாஸா எல்லா தொகுதிகளுக்கும் வருவார்னு தவெக சொன்னது. ஆனால், ஒருமுறை அனுமதி மறுத்ததற்கே 2 நாட்கள் பிரச்சாரத்தை தள்ளிபோட்டுவிட்டார்.. பக்கா மாஸ் இப்போ பொடி மாஸ் ஆயிட்டார்’ என சிலர் நக்கலடித்து வருகிறார்கள்.