போர் இன்னும் சில வாரம்தான்!. வெற்றி எங்களுக்கே!.. அமெரிக்க கொக்கரிப்பு..
Webdunia Tamil March 28, 2026 07:48 PM


ஈரான் அணு ஆயுத பரிசோதனை செய்வதால் அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் நாட்டின் மீது தாக்குதலை நடத்த துவங்கியது. சில நாட்களில் இது போராக மாறியது. அதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். இதனால் கோபப்பட்ட ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளை தொடர்ந்து தாக்கி வருகிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்வது தடைபட்டிருக்கிறது..

குறிப்பாக கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடிவிட்டது. அதோடு அந்த வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இதையடுத்து ஹோர்மூஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் ஈரான் திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்

ஆனால் அதை ஈரான் நிராகரித்துவிட்டது. அதோடு அமெரிக்க கொண்டுவந்த 15 அம்ச திட்டங்களையும் ஈரான் ஏற்கவில்லை. சில நாட்களில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதல் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என டொனாட்ல் டிரம்ப் கூறினார்.

இந்நிலையில், செய்தியாளிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ ஈரான் மீதான போர் வரும் வாரங்களில் முடிவுக்கு வரும்.. ஈரானில் தரைப்படை வீரர்களை களமிறக்கமாலேயே அமெரிக்கா தனது இலக்குகளை எட்டும் எனக் கூறியிருக்கிறார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.