தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. திமுகவை பொருத்தவரை வழக்கத்துக்கு மாறாக இந்த முறை அதிக கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், மதிமுக, விடுதலைச் சிறுத்தை, கம்யூனிச் உள்ளிட்ட பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருக்கிறது. அதில் கூட்டணி கட்சிகள் போக திமுக 163 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இன்று காலை திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.
அதில் ஏற்கனவே வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏவாக இருக்கும் பலருக்கும் சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், சில புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் ஏற்கனவே திமுகவில் அமைச்சராக உள்ள ஆறு பேருக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற அதே தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அந்தவகையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொளத்தூர் தொகுதியும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சேப்பாக் திருவல்லிக்கேணி தொகுதியும், துறைமுகம் தொகுதி சேகர் பாபுவுக்கும், மயிலாப்பூர் தொகுதி ஏ.வ.வேலுவுக்கும், சைதாப்பேட்டை தொகுதி மா.சுப்பிரமணியனுக்கும், ஆயிரம் விளக்கு தொகுதி எழிலன் நாகநாதனுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்று திமுக அமைச்சராக இருக்கும் 3 பேருக்கு இந்த முறை சீட் கொடுக்கப்படவில்லை..
அதாவது தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற கயல்விழி செல்வராஜ், பத்மநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற மனோ தங்கராஜ், ராணிப்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்.காந்தி ஆகிய மூன்று அமைச்சர்களுக்கும் இந்தமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.