அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு திமுகவில் சீட் இல்லை.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசியல் கூட்டணி மட்டுமல்ல கொள்கை கூட்டணி எனக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. 70 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம் எனவும் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டியிடுவதாகவும் கூறினார்.
திமுக வேட்பாளர்கள் பட்டியலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட நிலையில், அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு திமுகவில் சீட் இல்லை. கயல்விழி செல்வராஜின் தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் இந்திராணி போட்டியிடுகிறார். மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்களில் 125 பட்டதாரிகளாவர்.