IPL 2026: 19 ஆண்டுகளில் முதல்முறை.. ஐபிஎல்லில் 10 அணிகளுக்கும் இந்திய கேப்டன்கள்!
TV9 Tamil News March 28, 2026 07:48 PM

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனுக்கான களம் தற்போது தயாராகிவிட்டது. ஐபிஎல் விளையாட 10 அணிகளும் தங்களது ஆயத்தப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. மேலும் பெரும்பாலான அணிகள் பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடி தங்கள் பலத்தை சோதித்து வருகின்றனர். இதற்கிடையில், ஐபிஎல்-ன் 19 ஆண்டு கால வரலாற்றில் ஒரு பெரிய சாதனை படைக்கப்பட உள்ளது. இது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 2026 சீசனில் உள்ள 10 அணிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டன்களாக (IPL Captains) இருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர், 8 அணிகள் இருந்தபோது இது நிகழ்ந்துள்ளது. ஆனால் 10 அணிகளாக விரிவாக்கப்பட்ட பிறகு, ஒரு வெளிநாட்டு வீரர் கூட கேப்டனாக இல்லாத முதல் வரலாற்று நிகழ்வு இதுவாகும்.

ALSO READ: ஐபிஎல் போட்டிகளை தடையின்றி பார்க்கணுமா? ஏர்டெல், ஜியோ வழங்கும் சிறந்த டேட்டா பிளான் – எப்படி தேர்வு செய்வது?

பேட் கம்மின்ஸின் காயத்தால் நிகழ்ந்த அதிசயம்:

இந்த வரலாற்றுச் சாதனைக்கு ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸின் காயம் முக்கியக் காரணமாக உள்ளது. காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸால் 2026 ஐபிஎல் தொடரின் தொடக்க சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. எனவே, கம்மின்ஸ் இல்லாத நிலையில், ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷனை கேப்டனாக நியமித்துள்ளது. மீதமுள்ள 9 அணிகளுக்கும் ஏற்கனவே இந்திய கேப்டன்கள் இருந்த நிலையில், தற்போது தொடக்கப் போட்டிகளுக்கு ஹைதராபாத் அணியை ஒரு இந்தியர் வழிநடத்தி இந்த தனித்துவமான சாதனையை உருவாக்கியுள்ளார்.

ஐபிஎல் 2026-ல் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்கள் பட்டியல்:
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ரஜத் படிதார்
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: இஷான் கிஷன் (பேட் கம்மின்ஸ் இல்லாத வரை)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரஹானே
  • பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர்
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரிஷப் பண்ட்
  • மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்ட்யா
  • ராஜஸ்தான் ராயல்ஸ்: ரியான் பராக்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட்
  • டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்சர் படேல்
  • குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில்

ALSO READ: இரண்டு வாரங்களுக்கு தோனியால் விளையாட முடியாது – சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்

முதல் முறையாக ஐபிஎல் அணியை வழிநடத்தும் இஷான் கிஷன்:

இஷான் கிஷன் ஒரு ஐபிஎல் அணியை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும், உள்ளூர் கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்ததில் அவருக்குப் பரந்த அனுபவம் உண்டு. 2025 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் இஷான் கிஷன் ஜார்கண்ட் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி, அணியை சாம்பியனாக்கினார். இந்த வலுவான ஆட்டத்தின் அடிப்படையில், 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இஷானுக்கு இடம் கிடைத்தது. அங்கு, தனது அதிரடி பேட்டிங்கால் இந்தியா 2026 உலகக் கோப்பையை வெல்வதற்கு அவர் பெரும் பங்களிப்பை வழங்கினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.