விஜய் இப்பதான்!. எனக்கு 15 வருஷமா இதுதான் நடக்குது!.. சீமான் கோபம்...
Webdunia Tamil March 28, 2026 04:48 PM


திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கடந்த 50 வருடங்களாகவே தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. அந்த இரண்டு கட்சிகளையும் எதிர்த்து புதிதாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் வெற்றி பெறுவது என்பது சுலபமில்லை . பல வகைகளும் குடைச்சல் கொடுப்பார்கள்.. தனிப்பட்டமுறையில் தாக்குவார்கள். மோசமாகவும், இழிவாகவும் விமர்சிப்பார்கள், தவறான பிரச்சாரங்களை பரப்புவார்கள், குடும்ப பிரச்சினைகளை பற்றி பொது வழியில் பேசி அசிங்கப்படுத்துவார்கள். இதையெல்லாம் தாண்டி அரசியலில் தாக்குப்பிடித்து வெற்றி பெற வேண்டும் அது அவ்வளவு சுலபமில்லை..

தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கியிருக்கின்றன.. எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார்.. திமுக தலைவர் ஸ்டாலின் வருகிற ஏப்ரல் 3ம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

ஒருபக்கம்,நடிகராக இருந்து அரசியல் கட்சியை துவங்கியுள்ள விஜய் இன்று அவர் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை துவங்க திட்டமிட்டிருந்தார்.. ஆனால் தேர்தல் ஆணையம் அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை..

இதற்கு திமுகதான் காரணம் விஜய் அறிக்கை வெளியிட்டார். ஆனால் இதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை.. அனுமதியை தேர்தல் ஆணையம்தான் கொடுக்க வேண்டும்.. இதுகூட விஜய்க்கு தெரியவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.

இந்நிலையில்தான், விஜய்க்கு அனுமதி மறுத்தது தொடர்பாக கருத்து தெரிவித்த சீமான் ‘விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் இல்லை.. விஜய் அனுபவிப்பதை நான் கடந்த 15 வருடங்களாக அனுபவித்து வருகிறேன்.. மக்கள் நடமாட்டமே இல்லாத இடத்தில்தான் எனக்கு அனுமதி கொடுக்கிறார்கள்’ என பொங்கியிருக்கிறார்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.